கல்லக்குடியில் சத்குருநாதர் ஞானானந்தா ஆசிரமத்தில் குருபூஜை
கல்லக்குடியில் சத்குருநாதர் ஞானானந்தா ஆசிரமத்தில் குருபூஜை நடைபெற்றது.
கல்லக்குடி ஸ்ரீ நித்ய கல்யாணி உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள ஞானானந்தா ஆசிரமத்தில் குருபூஜை நடைபெற்றது. முன்னதாக திருவடி பூஜை, வேதபாராணயங்கள், யாகங்கள் நடந்தது. இதைத்தொடர்ந்து நாம சங்கீர்த்தனம், அன்னதானம், சத்குருநாதர் திருவீதியுலா நடைபெற்றது. சித்ரா பவுர்ணமியையொட்டி பாதுகாபூஜை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கலசஸ்தாபனம், மஹான்யாச ருத்ரபா ராயணம், ஹோமம், சஷ்டி அர்ச்சனையும், 12.30 மணியளவில் மகா தீபாராதனையுடன், அன்னதானம் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் ஸ்ரீ சத்குருநாதர் ஊர்வலமாக தேரோடும் வீதிகள், கடைவீதி வழியாக திருவீதியுலா நடைபெற்று கோவிலில் நிறைவுபெற்றது. திருவீதியுலாவின் போது அடியார்கள் குருவருள் வேண்டி பாசுரங்கள் வாசித்து வந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் குருபூஜை விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமபட்டையதார்கள், முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.