சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

விருதுநகர், ராஜபாளையத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

விருதுநகர்

ராஜபாளையம்

விருதுநகர், ராஜபாளையத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

சட்டப்பூர்வ பென்ஷன் ரூ.7850-ஐ வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும், ஈம கிரியை சடங்கிற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக காலி தட்டேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் விளக்க உரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் தொடக்க உரை நிகழ்த்தினார். இதில் திரளான சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காலி தட்டுகளை ஏந்தியவாறு, குறைந்தபட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு மற்றும் ஈமக்கிரியை செலவு நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Next Story