சத்தியமங்கலம் மார்க்கெட்டில் காக்கடா பூ கிலோ ரூ.1,125-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் காக்கடா பூ கிலோ ரூ.1,125-க்கு ஏலம் போனது.
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.952-க்கும், முல்லை ரூ.360-க்கும் காக்கடா ரூ.1,125-க்கும், செண்டுமல்லி ரூ.84-க்கும், பட்டுப்பூ ரூ.77-க்கும், சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.
Related Tags :
Next Story