சத்தியமங்கலம் மார்க்கெட்டில் காக்கடா பூ கிலோ ரூ.700-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் காக்கடா பூ கிலோ ரூ.700-க்கு ஏலம் போனது
ஈரோடு
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 6 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.350-க்கும், முல்லை ரூ.120-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.44-க்கும், பட்டுப்பூ ரூ.140-க்கும், கனகாம்பரம் ரூ.410-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.60-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.
Related Tags :
Next Story