சத்தியமங்கலம் மார்க்கெட்டில் முல்லை பூ கிலோ ரூ.880-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் முல்லை பூ கிலோ ரூ.880-க்கு ஏலம்
x

முல்லை பூ

ஈரோடு

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.525-க்கும், முல்லை ரூ.880-க்கும், காக்கடா ரூ.350-க்கும், செண்டுமல்லி ரூ.33-க்கும், பட்டுப்பூ ரூ.91-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.130-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.130-க்கும் ஏலம் போனது.


Next Story