சத்தியமங்கலம் வடவள்ளிஅன்னை வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழா


சத்தியமங்கலம் வடவள்ளிஅன்னை வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழா
x

சத்தியமங்கலம் வடவள்ளி அன்னை வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழா நடைபெற்றது

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே உள்ள வடவள்ளியில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு தேர் திருவிழா நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு ஊட்டி மறை மாவட்ட ஆயர் அருள்ராஜ் தலைமையில் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர் இரவு 7 மணி அளவில் அன்னை வேளாங்கண்ணி மாதா திரு உருவம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தேர் ஊர்வலம் சென்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தேருடன் சென்றனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பு நவநாள் திருப்பதி பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுவடவள்ளி மாதா கோவில் பங்குத்தந்தை மரிய பீட்டர் செய்திருந்தார்.


Next Story