புதுக்கோட்டையில் சனிக்கிழமை தி.மு.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்


புதுக்கோட்டையில் சனிக்கிழமை  தி.மு.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் சனிக்கிழமை தி.மு.க. இளைஞர் அணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய திருநாட்டின் பன்முக தன்மையை சிதைக்கும் வகையிலும் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இந்திய கூட்டாட்சிதன்மைக்கு விரோதமாகவும், அரசியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளின் பயன்பாட்டுக்கு விரோதமாகவும், இந்திமொழியை திணிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள், மாணவர்கள் குரல் கொடுத்து போராட வேண்டுமென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுக்கோட்டை பஜாரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகளும், மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளும், கிளைக் கழக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story