சிவகிரி அருகே சடையப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்


சிவகிரி அருகே சடையப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 24 Jun 2022 8:46 PM GMT (Updated: 2022-06-25T02:25:21+05:30)

சிவகிரி அருகே சடையப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஈரோடு

சிவகிரி:

சிவகிரி சிலுவம்பாளையத்தில் உள்ள சடையப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக கடந்த 23-ந் தேதி விநாயகர் வழிபாடுடன் விழா தொடங்கியது. அன்று மாலை 6 மணியளவில் முதல் கால யாக பூஜை நடைபெற்றது, நேற்று காலை 6.30 மணியளவில் 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று காலை 8 மணியளவில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத சடையப்பசாமி, கன்னிமார் மற்றும் தன்னாசியப்பனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story