மனவளர்ச்சி குன்றிய பெண்கள் இல்லத்தை சேர்ந்தவர் சாவு


மனவளர்ச்சி குன்றிய பெண்கள் இல்லத்தை சேர்ந்தவர் சாவு
x

மனவளர்ச்சி குன்றிய பெண்கள் இல்லத்தை சேர்ந்தவர் திடீரென இறந்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அய்யம்பாளையத்தை அடுத்த அஸ்வநாதசுரனை பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (வயது 35).

இவர் அந்த பகுதியில் உள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தொழில் பயிற்சி இல்லத்தில் கடந்த 5 வருடங்களாக வசித்து வந்தார். மேலும் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை இல்லத்தில் இருந்தவர்கள் மீட்டு அடி அண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு ஆரோக்கியமேரியை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story