தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்
புளியங்குடி தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
புளியங்குடி:
புளியங்குடி தபால் நிலையத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணை அஞ்சல் அதிகாரி ஸ்டெல்லா மேரி வரவேற்று பேசினார். டாக்டர் சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு திட்ட கணக்கு புத்தகங்களை வழங்கினர். புளியங்குடி நகர்மன்ற துணைத்தலைவர் அந்தோணிசாமி, தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராம் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகளில் உள்ள 105 தெருக்களில் பேவர்பிளாக் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹரிகரன் முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.