சாயர்புரம் போப் கல்லூரியில்விளையாட்டு விழா


சாயர்புரம் போப் கல்லூரியில்விளையாட்டு விழா
x

சாயர்புரம் போப் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் போப் கல்லூரி உடற்கல்வி துறை சார்பாக 61-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் நிகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு)செல்வகுமார் முன்னிலை வகித்தார். வேதியல்துறை பேராசியை இளவரசி வரவேற்றார். விளையாட்டு உடற்கல்வி இயக்குனர் ஜோன்ஸ் ராஜன் விளையாட்டுத்துறை அறிக்கைகளை சமர்ப்பித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியர் செல்வராஜ் மனுநீதி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். அகில இந்திய கபடி வீரர் சசிகுமார் பொன்னுதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கினார். இதில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி பத்திரகாளி பெண்கள் தனிப்பிரிவு சாம்பியன் பட்டத்தையும், ஆண்கள் பிரிவில் பொருளாதார துறை முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர் சுதாகர் சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பொருளாதாரத்துறை மாணவ, மாணவிகள் தட்டி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் குபேரால், வளர்மதி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். ஆங்கிலத் துறை பேராசிரியர் ராஜேஷ் செல்வராஜ் நன்றி கூறினார்


Next Story