கணவர் வரதட்சணை கேட்டதாக கூறி விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி:உறவினர்கள் சாலை மறியல்


கணவர் வரதட்சணை கேட்டதாக கூறி விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி:உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கணவர் வரதட்சணை கேட்டதாக கூறி விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்றார்.

தேனி

கம்பம் பாரதியார் நகர் வடக்கு முதல் தெருவைச் சேர்ந்தவர் வித்யாபதி (வயது 34). தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி தாரதி (31). கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்படட தகராறில் தாரதி கோபித்து கொண்டு கம்பத்தில் உள்ள பெற்ேறார் வீட்டிற்கு சென்றார். பின்னர் இருவரது பெற்றோரும் கணவன்-மனைவியை சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் தாரதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது போலீசாரிடம் தாரதி வாக்குமூலம் கொடுத்தார். அதில், கணவர் அரசு வேலைக்காக எனது பெற்றோரிடம் பணம் வாங்கி வரச்சொன்னார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படு்த்தினர். இதனால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இதற்கிடையே தகவல் அறிந்த தாரதியின் உறவினர்கள் நேற்று இரவு கம்பம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். பின்னர் அவர்கள் தாரதியின் கணவர் வித்யாபதி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்யக்கோரி கம்பம்-கூடலூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story