அம்பேத்கர் சிலைக்கு எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை


அம்பேத்கர் சிலைக்கு எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story