எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்கள் மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்கள் மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
மத்திய மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வேலாண்டி தலைமையிலும், மாநில பொருளாளர் சோலைமலை முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் மாதவன் ஸ்ரீராமர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் நிறுவன மாநில தலைவர் கருப்பையா நிறைவுறையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஒப்பந்த பணியாளர்கள் நியமனத்தை கைவிட வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், போலியாக சாதி சான்றிதழ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரை மாவட்ட துணை செயலாளர் பிச்சை வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.