வேதாரண்யத்தில் பரவலாக மழை
வேதாரண்யத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
பரவலாக மழை
வேதாரண்யம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழைபெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் நேற்று மாலை செம்போடை, கோடிக்கரை,கோடியக்காடு, நெய்விளக்கு, தோப்புத்துறை, புஷ்பவனம், பெரிய குத்தகை, நாலுவேதபதி, கடி நெல்வயல், கருப்பம்புலம், குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இ்ந்த மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்துள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
இந்த மழையால் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல், பகுதியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் உப்பு ஏற்றுமதி பணியும் பாதிக்கப்பட்டது. இந்த மழையால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.