போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்
பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் மாணவிகளுக்கு பாடம் நடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் மாணவிகளுக்கு பாடம் நடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பெருமாநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் வகைப்பறை பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக சில வகுப்புகள் மரத்தடியில் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் வகுப்பறைகள் பழைய ஓட்டு கட்டிடம் என்பதால் மழைக்காலங்களில் ஒழுகுவதாகவும் மாணவிகள் தெரிவிக்கின்றனர். தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின் மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பறைகள் இல்லாததால், ஆண்கள் பள்ளியில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதன் காரணமாக முன்னாள் மாணவர் அமைப்பினர் சார்பில் தற்காலிக வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மாணவர் அமைப்பினர் இதுகுறித்து கூறியதாவது:-
கூடுதல் வகுப்பறை
பெருமாநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறையை போக்கும் வகையில், ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகம், ஆசிரியர் அறைகளுடன் கூடிய வகுப்பறைகள் தரைத்தளம், முதல் தளங்களில் கட்டப்பட்டு வருவதாகவும், இரண்டாவது தளம் அமைத்து இன்னும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.