ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் பள்ளிக்கூடத்தில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்ததால் பரபரப்பு- கட்டிடத்தை சீரமைக்கக்கோரி பெற்றோர்கள் போராட்டம்


ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் பள்ளிக்கூடத்தில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தை சீரமைக்கக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் பள்ளிக்கூடத்தில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தை சீரமைக்கக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிமெண்ட் சிலாப்

ஈரோடு வீரப்பன்சத்திரம், குட்டைமேடு வீதியில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 400 -க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளிக்கூடத்தின் கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுவதாகவும், போதிய கழிப்பறை வசதி இல்லையென்றும் மாணவிகள், பெற்றோர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கூட கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. நேற்று மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர். அப்போது பள்ளிக்கூட கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சிமெண்ட் சிலாப் இடிந்து கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போராட்டம்

இதுபற்றி அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கூட வளாகத்துக்குள் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறும்போது, 'பள்ளிக்கூட கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் எப்போது இடிந்து விழும் என்று தெரியவில்லை. கட்டிடத்தின் சிமெண்ட் சிலாப் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இடிந்து விழுந்துள்ளது. நல்ல வேளையாக எங்களுடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் இங்குள்ள மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. இதனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' என்றனர். இதையடுத்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொ டர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story