தினத்தந்தி செய்தி எதிரொலி: பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது- அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி செய்தி எதிரொலி: பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது- அதிகாரிகள் நடவடிக்கை
x

தினத்தந்தி செய்தி எதிரொலியால் பழுதடைந்த பள்ளிக்கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஈரோடு

அம்மாப்பேட்டை

தினத்தந்தி செய்தி எதிரொலியால் பழுதடைந்த பள்ளிக்கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பழுதடைந்த கட்டிடம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊமாரெட்டியூரில் 40 வருடங்களாக பழுதடைந்த பள்ளிக்கட்டிடம் இருந்தது.

மாணவ, மாணவிகள் நலன் கருதி அந்த பள்ளிக்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி தினத்தந்தியில் விரிவாக படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குகானந்தன் முன்னிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பாராட்டு

இதைத்தொடர்ந்து பழுதடைந்த நிலையில் இருந்த பள்ளிக்கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

இந்தநிலையில் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

Next Story