திருச்சி அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி நிர்வாகி கைது
திருச்சி அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
திருச்சி அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொந்தரவு
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து பாலியல் புகார் வந்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, குழந்தைகள் நல அலுவலர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பள்ளி ஊழியர்களான சிவகிரி (வயது 34), பார்த்திபன் (44), ஏசுராஜ் (32), தனசேகர் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பள்ளி நிர்வாகி கைது
இந்த நிலையில் நேற்று காலை அந்த பள்ளியின் முக்கிய நிர்வாகியான கருப்பையா (46) என்பவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவர்களிடம் கருப்பையா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.