திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து
திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடலூர்
ராமநத்தம்,
திட்டக்குடி அடுத்த தொழுதூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சொந்த மான பஸ், நேற்று காலை திட்டக்கடி பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை பெருமுளையை சேர்ந்த ரவிச்சந்திரன் (30) என்பவர் ஓட்டிவந்தார்.
பஸ் கனகம்பாடி பஸ்நிறுத்தம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்புகள் நிகழவில்லை. டிரைவர் ரவிச்சந்திரன் மற்றும் ஒரு மாணவி மட்டும் லேசான காயமடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுபின்னர் வீடு திரும்பினார்கள். விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story