பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு முன்பு பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜசிம்மன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் துரை சரவணன் மற்றும் மாநில பிரசார செயலாளர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது, ஊதியம் வழங்காததை கண்டித்தும், ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி வரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்து உடனடியாக ஆணைகள் வழங்கப்பட வேண்டும். கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு 1993-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட இணை இயக்குனர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.