பள்ளி கேட் விழுந்து காவலாளி பலி


பள்ளி கேட் விழுந்து காவலாளி பலி
x

காட்பாடியில் பள்ளி கேட் விழுந்து காவலாளி பலியானார்.

வேலூர்

காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் பழைய காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போது பள்ளியின் கேட்டை ராமமூர்த்தி பூட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கேட் அவர் மீது விழுந்தது. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story