சூரக்கோட்டை மாணவிக்கு கிராம மக்கள் பாராட்டு


சூரக்கோட்டை மாணவிக்கு கிராம மக்கள் பாராட்டு
x

தெற்காசிய உறைவாள் சண்டை போட்டியில் தங்கம் வென்ற சூரக்கோட்டை மாணவி தர்ஷினியை கிராமமக்கள் பாராட்டினர். இவர் ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தெற்காசிய உறைவாள் சண்டை போட்டியில் தங்கம் வென்ற சூரக்கோட்டை மாணவி தர்ஷினியை கிராமமக்கள் பாராட்டினர். இவர் ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தங்கம் வென்ற மாணவி

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் தர்ஷினி (வயது15). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உறைவாள் சண்டை விளையாட்டு போட்டியில் கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.இந்தநிலையில் நேபாளம் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் தெற்காசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தர்ஷினி முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்றார். இதையடுத்து தர்ஷினி மலேசிய நாட்டில் 2023-24-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்து கடந்த வாரம் அதற்கான சான்றிதழ்களும், பதக்கங்களும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது.

கிராமமக்கள் பாராட்டு

இதையடுத்து தெற்காசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி தர்ஷினிக்கு சொந்த ஊரான சூரக்கோட்டையில் நேற்று கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி பழனிமேகம் தலைமை தாங்கினார். தேசிய கபடி பயிற்றுனர் குலோத்துங்கன் வரவேற்றார். தஞ்சை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வைஜெயந்தி கேசவன் மாணவியையும், உறைவாள் சண்டை விளையாட்டு பயிற்றுனர் செந்தில்குமாரையும் பாராட்டி பொன்னாடை அணிவித்தார்.விழாவில் கிராம மக்கள் பலரும் மாணவியை பாராட்டினர். இதைத் தொடர்ந்து மாணவி தர்ஷினி 108 தென்னங் கன்றுகளையும், 1,000 பனைவிதைகளையும் நட்டு கிராமத்தை பசுமை நிறைந்த கிராமமாக மாற்றும் முயற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கிராம மக்கள் பொது இடங்களில் தென்னங்கன்றுகள், பனை விதைகளை நடவு செய்தனர்.


Next Story