பள்ளி மாணவி சாதனை


பள்ளி மாணவி சாதனை
x

மாரத்தான் போட்டியில் கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவி சாதனை படைத்தார்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

காவல்துறையினரின் போதை மற்றும் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் அம்பை தாலுகாவைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகள் சார்பில் ஆண்கள்-பெண்கள் என 3,200 பேர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி சூப்பிரண்டு பல்வீர் சிங் முன்னிலை வகித்தார். அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பெண்களுக்கான 5 கி.மீ. பிரிவில் கீழாம்பூர் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவி சிவரஞ்சனி மூன்றாம் இடத்தை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சாதனை படைத்த மாணவியை பள்ளியின் சேர்மன் டாக்டர் ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்டா, மேலாளர் ஜோசப் லியாண்டர், பள்ளி முதல்வர் அமலா ஜூரியன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.


Next Story