லாரி மோதி பள்ளி மாணவி சாவு
தொரப்பாடியில்லாரி மோதி பள்ளி மாணவி இறந்தார்.
தொரப்பாடியில்லாரி மோதி பள்ளி மாணவி இறந்தார்.
வேலூரை அடுத்த அரியூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 16), தொரப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தொரப்பாடியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மாணவியின் மீது மோதியது.
அதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மதுமிதாவின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.