பள்ளி மாணவி தற்கொலை


பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 5:12 PM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

தேனி அல்லிநகரம் பாத்திமா தியேட்டர் தெரு காந்தி நகரை சேர்ந்தவர் பவுன் தாய். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 15). இவர், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். புவனேஸ்வரி அடிக்கடி வயிற்று வலியால் அவதியடைந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story