பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அகனி ஊராட்சியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழிஅருகே,அகனி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில்பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ராஅன்பழகன் வரவேற்றார். கூட்டத்தில் புதிய பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக சங்கீதா கிள்ளிவளவன் தேர்வு செய்யப்பட்டார். இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரிய குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் பிரியாசேகர், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி ராஜா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஹென்றிஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story