பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x

தோப்புத்துறையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி தலைமை தாங்கினார். பள்ள தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர்உமாமகேஸ்வரிமற்றும் ஆர்த்தி, செல்வராணி, நகர் மன்ற உறுப்பினர்அம்சவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் பள்ளிக்கு புதியகணினி வழங்குவது, வருகிற 15-ந் தேதி முன்னாள் ஜனாதிபதி தலைவர்அப்துல் கலாம் பிறந்த நாளில் பேச்சு போட்டி, பாட்டுப்போட்டி,மாறு வேடப்போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்குவது, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிதிட்டத்திற்கு அரசின் வழிக்காட்டலின் படி ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக செயல்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆசிரியர் மாணிக்கம் நன்றி கூறினார்.


Next Story