பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்


பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
x

தோப்புத்துறையில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நிஷாந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் அம்சவள்ளி கோவிந்தராஜிலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரிய பிரதிநிதி மாணிக்கம் வரவேற்றார். கூட்டத்தில் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் பழுதடைந்துளள் பள்ளி கதவு, ஜன்னல்கள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டித் தர வேண்டும். காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர்கள் இணைந்து சிறப்பு கவனம் செலுத்துவது, இந்த மாதம் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் புதிய கணினி வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர் ஆர்த்தி நன்றி கூறினார்.


Next Story