கோடந்தூர் தொடக்கப்பள்ளி சீரமைப்பு பணி முடிந்த நிலையில், அந்த பணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடந்தூர் தொடக்கப்பள்ளி சீரமைப்பு பணி முடிந்த நிலையில், அந்த பணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x

கோடந்தூர் தொடக்கப்பள்ளி சீரமைப்பு பணி முடிந்த நிலையில், அந்த பணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

தளி,

கோடந்தூர் தொடக்கப்பள்ளி சீரமைப்பு பணி முடிந்த நிலையில், அந்த பணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடக்கப்பள்ளி

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளஞ்சி, தளிஞ்சிவயல், மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக பூர்த்தி அடையவில்லை. இதனால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பின்தங்கியே உள்ளது.

மானுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பில் உள்ள தொடக்கப்பள்ளி நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சீரமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பணி முறையாக நடைபெறாமல் பெயரளவுக்கு செய்யப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆய்வு

பள்ளியில் சுகாதார வளாகம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் குழந்தைகள் அவதிக்கு உள்ளாவதும் தொடர் கதையாக உள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.6 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் மானுப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பள்ளியில் பழுபார்த்தல் மற்றும் வர்ணம் பூசுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பணி முழுமை மற்றும் தரம் இல்லாமல் பெயரளவுக்கு மட்டுமே செய்து முடிக்கப்பட்டு உள்ளது.

எனவே கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பில் உள்ள தொடக்கப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்த்தல் மற்றும் வர்ணம் பூசம் பணியை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

---

2 காலம்

கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பில் உள்ள தொடக்கப் பள்ளியை படத்தில் காணலாம்.

Next Story