பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகை


பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகை
x

நெல்லை டவுனில் பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் கல்லணை ஆரம்ப பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு புதிதாக அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்ததால் இட நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிக்கூட நிர்வாகம், பள்ளிக்கூடத்தில் உள்ள 4, 5-ம் வகுப்புகளை டவுன் பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நேற்று கல்லணை ஆரம்ப பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இட நெருக்கடியை காரணம் காட்டி பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை மாற்றக்கூடாது. பள்ளிக்கு அருகில் மாநகராட்சி கட்டிடம் இருந்தும், குழந்தைகளை அவ்வளவு தூரம் ஏன் அலைய வைக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி பள்ளிக்கூடத்தின் முன்பு சாலை மறியலுக்கு முயன்றனர். தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


Next Story