டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான்.
நெமிலி
டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான்.
நெமிலியை அடுத்த பள்ளுரைச் சேர்ந்தவர் பாரதி. இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கஸ்தூரி, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் சச்சின் (வயது 6) காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான்.
கடந்த 12-ந் தேதி காய்ச்சல் காரணமாக உடல் சோர்வுடன் இருந்ததால் நெமிலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் காய்ச்சல் குறையாமல் இருந்ததால் சச்சினை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததை உறுதி செய்து. மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2 நாட்களாக சிகிச்ைச பெற்று வந்த சிறுவன் சச்சின் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான்.
ஏற்கனவே கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரக்கோணம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியாகி இருந்தான். இந்த நிலையில் மேலும் ஒரு சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு இறந்திருப்பது சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட சுபகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்