பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு
பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு
மதுரை
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசுகாளை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் இறந்து விட்டார். இவரது மனைவி மணிமேகலை. தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரது மகன் பாலமுருகன் (வயது 8) அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலையில் தன் வீட்டு ஓரத்தில் நடந்து சென்ற போது பாம்பு கடித்து விட்டது. இதனால் பாலமுருகன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான். இதனையடுத்து உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் வி.புதூர் கிராமம் சோகத்தில் மூழ்கியது. இது குறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story