மினிபஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம்


மினிபஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மினிபஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் ராஜசெல்வம் (வயது 15). இவர் ஆலங்குளம் அருகே நல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாா். தினமும் பள்ளிக்கு மினி பஸ்சில் செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று காலையில் பள்ளிக்கு வழக்கம் போல் ராஜசெல்வம் புறப்பட்டார். மினி பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

நெட்டூர் சாலையில் சென்ற போது படியில் இருந்து ராஜசெல்வம் தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுசம்பந்தமாக ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story