அறிவியல் கண்காட்சி போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை


அறிவியல் கண்காட்சி போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அறிவியல் கண்காட்சி போட்டியில் சாகுபுரம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு கொண்டு வரும் வகையில் சர்வதேச அளவில் அடல்ஸ் டிங்கரிங் ஆய்வகம் மூலம் மாணவ-மாணவிகளின் படைப்புகளை காட்சிப்படுத்தி அதில் சிறந்ததை தேர்வு செய்து ஊக்குவித்து வருகிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டி கடந்த மாதம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற்றது.

இறுதிப்போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மின்னணு படைப்புகள் பள்ளி, கல்லூரி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் ஜூனியர் ஜன்ஸ்டீன் தடத்தில் 43 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. சர்வதேச அளவில் நடந்த போட்டியில் சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் 8 மாணவர்கள் கலந்து கொண்டனர். 11-ம் வகுப்பு மாணவர் வி.அனீஸ் சங்கர் தயாரித்த தானியங்கி கழிவு அகற்றும் கருவிக்கான படைப்பு முதல் பரிசை பெற்றது. 10-ம் வகுப்பு பயிலும் ஏ.எம்.அபிஷேக் ராமின் செயற்கை நுண்ணறிவு இயக்கம் கவுரவ விருது பெற்றது. 12-ம் வகுப்பு மாணவர் செய்யது முகமது புகாரியின் பார்வையற்றோருக்கான காலனி படைப்பு, 8-ம் வகுப்பு மாணவர் எம்.கே.தியானேஷ், 12-ம் வகுப்பு விக்னேஷ், தயானந்த் ஆகியோரின் படைப்புகளான பார்வையற்றோருக்கான தொப்பி, சிவ சந்தோஷ் ஆகியோரின் செயற்கை நுண்ணறிவு ஸ்மார்ட் வரவேற்பு என்னும் கருவிப் போட்டியில் பங்கேற்றன.

கமலாதி சீனியர் செகண்டரி பள்ளி தகுதிச்சுற்று போட்டி நடத்தி இப்பகுதியில் இருந்து 7 படைப்புகளை இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள செய்தமைக்கும், அதில் 3 பரிசுகளை பெற்றதற்காகவும் தி ஹால் ஆப் பேம் எனும் விருது கிடைத்துள்ளது.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவியர் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிக்கு சிறப்பான முறையில் தகுதிச்சுற்றுக்கு ஏற்பாடு செய்த பள்ளியின் அடல் டிங்கரிங் ஆய்வக ஆசிரியை மு.சேர்மசக்திசிலீ ஆகியோரை பள்ளியின் டிரஸ்டிகளும், டி.சி.டபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன், மூத்த பொது மேலாளர் பி.ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர், தலைமை ஆசிரியை சுப்புரத்தினா, பள்ளி நிர்வாகி மதன் ஆகியோர் பாராட்டினர்.


Next Story