பெற்றோர், உறவினர்களிடம் நிதி திரட்டி கண்மாயை தூர்வாரும் பள்ளி மாணவர்கள்


பெற்றோர், உறவினர்களிடம் நிதி திரட்டி கண்மாயை தூர்வாரும் பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 5 Aug 2023 2:45 AM IST (Updated: 5 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர், உறவினர்களிடம் நிதி திரட்டி கண்மாயை பள்ளி மாணவர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி

தேனி 'தி லிட்டில் கிங்டம்' பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நீர்மேலாண்மை குறித்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் மாணவ-மாணவிகளுக்கு நீர்நிலைகளின் நன்மைகள், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகள் குழுவாக இணைந்து நிதி திரட்டி கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்க முன்வந்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு இந்த மாணவ-மாணவிகள் குழுவினர் தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள குப்பையாயூரணி கண்மாயை தூர்வார முடிவு செய்தனர். இதற்கான நிதியை மாணவ-மாணவிகள் தங்களின் பெற்றோர், உறவினர்களிடம் திரட்டினர். இதையடுத்து கண்மாய் தூர்வாரும் பணி சிறப்பு பூஜையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், பள்ளி தாளாளர் கண்ணன், பள்ளி முதல்வர் சுஜாதா, தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத்தலைவர் செல்வம், திட்ட ஒருங்கிணைப்பாளர் சியாமளா மற்றும் பலர் பங்கேற்றனர்.


Next Story