பள்ளி மாணவர்கள் சுதந்திர தினவிழா ஊர்வலம்
கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் சுதந்திர தினவிழா ஊர்வலம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் சுதந்திர தின விழா ஊர்வலம் நடைபெற்றது. நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே பழனிசெல்வம் ஏற்பாட்டில் நடந்த ஊர்வலத்தில் மாணவர்கள் மகாத்மா காந்தி, ஜான்சி ராணி, சுபாஷ் சந்திரபோஸ், பாரதியார், காமராஜர், நேரு, வேலுநாச்சியார் உள்ளிட்ட தேச தலைவர்களின் வேடம் அணிந்து கையில் தேசிய கொடி ஏந்தி பயணியர் விடுதி முன்பிருந்து புறப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார்.
தேசியக்கொடி விழிப்புணர்வு ஊர்வலத்தை நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அமரேந்திரன், ராமசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அருள் காந்த்ராஜ் நன்றி கூறினார்.