பள்ளி மாணவர்கள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி


பள்ளி மாணவர்கள்  மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பள்ளி மாணவர்கள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் போட்டி நடந்தது. இதில் கிறிஸ்டியா நகரம் டி.டி.டி.ஏ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பெற்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவன் முத்துக்குமார் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக்ஸ்டோக் போட்டியில் முதலிடமும், 100 மீட்டர் பரிஸ்டைல் போட்டியில் 2-ம் இடமும் பிடித்தார். மாணவன் மைக்கேல் சுரேன் 17 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் 200 மீட்டர் பிரிஸ்டைல் போட்டியில் முதலிடமும், 200 மீட்டர் பேக்ஸ்டோக் போட்டியில் 2-ம் இடமும், மாணவன் டினோ 100 மீட்டர் பிரிஸ்டைல் போட்டியில் 3-ம் இடமும், 100 மீட்டர் பிளேபாட்டியில் 2-ம் இடமும், மாணவன் ரோபின் 50 மீட்டர் பேக்ஸ் போக் போட்டியில் 3-ம் இடமும் பிடித்தனர். 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் ரோபின், மைக்கேல் சுரேன், ஜெ ரிக்சன், டினோ ஆகியோர் சாதனை படைத்தனர். இந்த மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதைனை படைத்துள்ள இந்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஆரோன்ராஜ், தலைமை ஆசிரியர் லிவிங்ஸ்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் அக்குமார், ஐசக்கிருபாகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story