பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது


பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது
x

பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

பள்ளி ஆசிரியை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி(வயது 40). இவர் துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதையொட்டி இவர் துறையூர் பகுதியில் வசித்து வருகிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக அவரும், அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரிடம் டியூசன் படித்த 10-ம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர், தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

போக்சோவில் கைது

அப்போது அந்த மாணவர், ஆசிரியையுடன் பேசியதும், படிப்பில் கவனமில்லாததும், அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி குழந்தைகள் நல அமைப்பு சார்பில் ஆசிரியையின் மீது முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி, ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார். அந்த மாணவர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story