ஸ்கூட்டர் மீது பஸ் மோதி பள்ளி ஆசிரியர் பலி
அரக்கோணம் அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி பள்ளி ஆசிரியர் பலியானார்.
ராணிப்பேட்டை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பூங்கா நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 54). இவர் திருத்தணியை அடுத்த அம்மையார் குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் நேற்று காலை திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் பகுதியில் சென்றபோது காஞ்சீபுரத்தில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற தனியார் பஸ், மகேஷ் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story