லாரி மோதி செவிலியர் உதவியாளர் படுகாயம்
லாரி மோதி செவிலியர் உதவியாளர் படுகாயம் அடைந்தார்.
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கருப்பையா நகரை சேர்ந்தவர் அமுதா(வயது 42). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் சாலையை கடந்தபோது, அந்த வழியாக வந்த மினி லாரி, அமுதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அமுதாவை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமுதா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரது மகள் பிரியா, ஜெயங்கொண்டம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story