டிராக்டர் மோதி பள்ளி ஆசிரியை பலி


டிராக்டர் மோதி பள்ளி ஆசிரியை பலி
x

டிராக்டர் மோதி பள்ளி ஆசிரியை பலியானார்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே சிலட்டூர் மேல் நிலைப்பள்ளியில் முதுகலை கணினி ஆசிரியையாக கார்த்தியாயினி (வயது 42) பணியாற்றி வந்தார். நேற்று பள்ளி முடிந்து அவர் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே கார்த்தியாயினி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story