பள்ளி ஆசிரியையிடம் 3 பவுன் நகை பறிப்பு
ராமநத்தம் அருகே பள்ளி ஆசிரியையிடம் 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.
கடலூர்
ராமநத்தம்:
பெரம்பலூர் மாவட்டம் திருவாளந்துரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி தமிழ்மணி(வயது 29). இவர் கீழக்கல்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை ராமநத்தம் அருகே உள்ள பெரங்கியத்தில் உள்ள தனது தோழி வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் அங்கிருந்து தனது தாய் ஊரான வாகையூர் நோக்கி புறப்பட்டார். அரங்கூருக்கும், வாகையூருக்கும் இடையே சென்றபோது மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 25 வயதுடைய வாலிபர், முகவரி கேட்பதுபோல் நடித்து தமிழ்மணியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story