கன்னியாகுமரி அருகே பள்ளிக்கூட வேன்-சுற்றுலா வேன் மோதல்; 5 பேர் படுகாயம்

கன்னியாகுமரி அருகே பள்ளிக்கூட வேன்-சுற்றுலா வேன் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கன்னியாகுமரி அருகே பள்ளிக்கூட வேன்-சுற்றுலா வேன் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் படுகாயம்
மராட்டிய மாநிலத்தில் இருந்து 18 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.
பின்னர் சுசீந்திரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக அவர்கள் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சுவாமிநாதபுரம் பகுதியில் அந்த சுற்றுலா வேன் சென்றது.
அப்போது கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான வேன் ஒன்று மாணவர்களை அவரவர் வீடுகளில் இறக்கி விட்டு மீண்டும் பள்ளி நோக்கி வந்தது. இந்தநிலையில் பள்ளிக்கூட வேனும், சுற்றுலா வேனும் எதிர்பாராதவிதமாக சுவாமிநாதபுரத்தில் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் 2 வேன்களின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. மேலும் சுற்றுலா வேனில் இருந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பள்ளிக்கூட வேனில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






