அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
அனுமதி பறாமல் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்கள் தரம் குறித்து சின்னகல்லுபள்ளியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆய்வு பணி நடைபெற்றது. இதில் வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், ஆலங்காயம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
மொத்தம் 243 வாகனங்களில் 130 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன் (வாணியம்பாடி), அமர்நாத் (ஆம்பூர்) ஆகியோர் ஆ?்ரு செய்தனர்.
15 வாகனங்கள் தகுதி நீக்கம்
அப்போது மாணவர்கள் பஸ்களிலிருந்து அவசரகாலத்தில் வெளியேறும் வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் மற்றும் வாகனங்கள் தரம் குறித்தும் ஆய்வ செய்யப்பட்டது. இதில் முறையாக பராமரிக்கப்படாத 15 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
ஆய்விற்கு முன்னதாக ஓட்டுனர்களுக்கு பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பது, முதலுதவி செய்தல் மற்றும் சாலை விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
பறிமுதல் செய்யப்படும்
ஆய்வுக்கு கொண்டு வரப்பட்ட 130 பள்ளி வாகனங்களில் சிறுகுறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ள 15 வாகனங்கள் அதன் குறைகளை சரி செய்தும், ஆய்வுக்காக கொண்டு வராத மீதமுள்ள வாகனங்களையும் வருகின்ற சனிக்கிழமை ஆய்வுக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வர தவறும் பட்சத்தில் அந்த வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஆய்வு முடிக்கப்பட்ட வாகனங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மேலும் அரசு அனுமதி பெறமல் இயகும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கூறினார்.