பள்ளி மாணவன் மாயம்
பள்ளி மாணவன் மாயம் ஆனார்.
கரூர்
தாந்தோணிமலை நிலநகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் அகிலேஸ்வரன் (வயது 14). இவன் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்தநிலையில் காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாக அகிலேஸ்வரனை அவரது தந்தை வெங்கேடசன் திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த அகிலேஸ்வரன் வீட்டில் இருந்து வெளியே சென்றவன் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story