சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவிகள்


சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவிகள்
x

செய்யாறு அருகே சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். .

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். .

பஸ் வசதி இல்லை

செய்யாறு தாலுகா அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செங்காடு, தவசி, இருங்கல், கீழ்மட்டை, விளாநல்லூர், கிருஷ்ணாபுரம், கருவேல்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பஸகளில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாலை நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் மாணவ-மாணவிகள் லிப்டு கேட்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆபத்தான பயணம்

இந்த நிலையில் இன்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவிகள் செய்யாறு நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவில் வாகனத்தில் வீட்டிற்கு சென்றனர்.

வாகனத்தில் உள்ளே இடம் இருந்தும் உள்ளே நின்று பயணம் செய்யாமல் வாகனத்தின் கம்பியை பிடித்துக் கொண்டு கதவின் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் கம்பி மீது நின்று கொண்டு சாகசம் செய்தவாறே பயணம் செய்தனர்.

அதனை கண்ட இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மாணவிகளை உள்ளே செல்லும்படி எச்சரிக்கை செய்தும் ஒரு சில மாணவிகள் மட்டுமே உள்ளே செல்ல 2 மாணவிகள் உள்ளே செல்லாமல் வெளியே நின்று பயணம் செய்தனர்.

அதில் ஒரு மாணவியோ ஒரு கையை மட்டுமே கம்பியை பிடித்துக் கொண்டு ஒரு கையை தொங்கவிட்டுக் கொண்டு ஆபத்தான சாகச பயணம் செய்வதை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

பஸ் வசதி

இளங்கன்று பயமறியாது என்பார்கள், ஆபத்தை உணராமல் மாணவிகள் இப்படி பயணம் செய்வதை தடுக்க மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு எவ்வாறு பாதுகாப்பாக சென்று வருகின்றனர் என கண்காணிக்க வேண்டும்.

மேலும் பள்ளி நேரங்களில் மாணவர்கள் பயணிக்க பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story