தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில்பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில்பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடங்கியது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் நேற்று தொடங்கியது. மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு சென்று சான்றிதழை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பிளஸ்-2 தேர்வு

தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் 8-ம்தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே மாதம் 12-ம் தேதி முதல் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை கொண்டு மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.

தொடக்கம்

இந்த நிலையில் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் நேற்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 11 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 18 ஆயிரத்து 509 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி சென்றனர்.


Next Story