நாளை மறுநாள் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் ஈரோட்டில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்


நாளை மறுநாள் பள்ளிக்கூடங்கள் திறப்பதால்   ஈரோட்டில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
x

நாளை மறுநாள் பள்ளிக்கூடங்கள் திறப்பு

ஈரோடு

பள்ளிக்கூடங்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதையொட்டி வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கூடங்கள் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளது.

இதையொட்டி பள்ளிக்கூடங்களை தயார்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மாணவர்கள் குடிநீர் வசதிக்காக நீர்த்தேக்க தொட்டியில் மருந்து தெளித்து அதை சுத்தமாக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்கூட சீருடை

இதேபோல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதையொட்டி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பேக், சீருடைகளையும் வாங்கி வருகிறார்கள்.

இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள ஜவுளி மற்றும் பேக் கடைகளில் பள்ளிக்கூட சீருடை மற்றும் பேக் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்களும் ஈரோட்டிற்கு வந்துள்ளது.

இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிக்கூடம் திறக்கும்போது மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கும் வகையில் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு பள்ளிக்கல்வி துறையினர் அனுப்பி வருகிறார்கள்.


Next Story