கோவில்பட்டிமாரியப்ப நாடார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி


கோவில்பட்டிமாரியப்ப நாடார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டிமாரியப்ப நாடார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி அரங்கில் 35-வது அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புகள் 300-க்கும் மேற்பட்டவை இடம் பெற்றிருந்தது. கண்காட்சி திறப்பு விழாவிற்கு பள்ளி தலைவரும், செயலாளருமான ஆர். ஏ. அய்யனார் தலைமை தாங்கினார். ஆசிரியை சுஜாதா வரவேற்று பேசினார்.

கண்காட்சியை மாவட்ட கல்வி அதிகாரியை எஸ். ஜெயப்பிரகாஷ் ராஜன் திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆய்வாளர் ரமேஷ், தலைமை ஆசிரியர் கே. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பார்வையிட்டு பாராட்டினர்.


Next Story